ஆப்நகரம்

தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 25 Aug 2016, 6:28 pm
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain may hit tamilnadu puducherry says imd
தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் அதன் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்ய உள்ளதாக கூறினார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி