ஆப்நகரம்

எந்த ஊர்களுக்கெல்லாம் மழை? இங்க செக் பண்ணுங்க!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கான மழை பற்றிய முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 9 Dec 2020, 2:25 pm
வடகிழக்கு பருவ காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tn weather update


அடுத்த 48 (டிசம்பர் 10) மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

சித்ரா கன்னத்தில் இரத்தக் கறை: மரணத்தின் பின்னுள்ள மர்மம் என்ன?

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

ரஜினிக்காக விஜய்க்கு வைக்கும் செக்? அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினம் (தூத்துக்குடி) 7, பெரியநாயக்கன் பாளையம் (கோவை), கோத்தகிரி (நீலகிரி ), வட்டணம் (ராமநாதபுரம்), குன்னூர் தலா 5, திருச்செந்தூர், சோலையார் (கோவை), காரியாபட்டி (விருதுநகர்), சோழிங்கநல்லூர் (சென்னை) தலா 4, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), உதகமண்டலம், தேக்கடி (தேனி), சூளகிரி (கிருஷ்ணகிரி), ஆத்தூர் (சேலம்), ஹிந்துஸ்தான் பல்கலை (செங்கல்பட்டு), வாலாஜா (ராணிப்பேட்டை), காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி