ஆப்நகரம்

இங்கெல்லாம் சுமார் மழை; ஆனா அங்க செம மழை- லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்து கொண்ட தகவல்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 29 Aug 2019, 7:47 pm
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Samayam Tamil Rain


அதில், பின்வரும் பகுதிகளில் மீண்டும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அவற்றில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.

சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை!

இதேபோல் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பாண்டி, கடலூர் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

நேற்றைய தினத்தைப் போன்று, தினமும் மேகமூட்டமான சூழலை எதிர்பார்க்க முடியாது. எனவே இன்றைய தினம் சில இடங்களில் மழையும், சில இடங்களில் வறண்ட வானிலையும் காணப்படும்.

இறங்கி அடிக்கப் போகும் மிக கன மழை- தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒரு அலர்ட்!

தற்போதைய சூழலின் படி, அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக் கூடும். பெங்களூருவிலும் மழை பெய்வதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. ஆந்திர மாநிலத்தின் சித்தூர் - நெல்லூர் பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புண்டு.

அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பு இல்லை. இங்கும், அங்குமாக பருவமழை பெய்யக் கூடும். இன்று(ஆகஸ்ட் 29) காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னை மண்டலத்தில் பெய்த மழைப்பொழிவு நிலவரம் பின்வருமாறு:

கொடுமுடியாறு அணையிலிருந்து ஆகஸ்ட் 30 முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

* திருவள்ளூர் - 36 மி.மீ
* சோழவரம் ஏரி - 31 மி.மீ
* செம்பரம்பாக்கம் ஏரி - 29 மி.மீ
* திருவாலங்காடு - 28 மி.மீ
* பூந்தமல்லி - 26 மி.மீ
* அம்பத்தூர் - 25 மி.மீ
* தரமணி - 7 மி.மீ
* ஆலந்தூர் - 6 மி.மீ
* மீனம்பாக்கம் - 6 மி.மீ

இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி