ஆப்நகரம்

Chennai Rains: இத்தனை மாவட்டங்களில் வெளுத்துக் கட்டப் போகும் மழை - தமிழ்நாடு வெதர் அப்டேட்!

தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்களை காணலாம்.

Samayam Tamil 5 Jul 2020, 3:13 pm
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஊரெங்கும் கொரோனா பீதி நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. இதனால் மழையால் எந்தவித பிரச்சினையும் இல்லை. இருப்பினும் விவசாயம், குடிநீர் போன்றவற்றின் ஆதாரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil Tamil Nadu Rains


இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி, தமிழகத்தின் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அவற்றில்,

செங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை: தேடப்பட்டு வந்த முக்கிய நபர் சரண்

1 - தேனி
2 - ஈரோடு
3 - கோவை
4 - நீலகிரி
5 - வேலூர்
6 - கிருஷ்ணகிரி
7 - தருமபுரி
8 - சேலம்
9 - ராணிப்பேட்டை
10 - திருப்பத்தூர்

ஆகிய மாவட்டங்கள் அடங்கும். காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகம், புதுவை மற்றும் கடலூரில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 70 மில்லிமீட்டர் மழையும், திருக்கழுக்குன்றத்தில் 60 மில்லிமீட்டர், கேளம்பாக்கம், மதுராந்தகம், வந்தவாசியில் தலா 50 மில்லிமீட்டர், திருப்பத்தூர், பெங்கலூர், சத்தியபாமா பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை, பெருந்துறையில் தலா 40 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவிற்கு கொரோனா!

மத்திய மேற்கு வங்கக் கடல், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி