ஆப்நகரம்

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 4 Sep 2016, 8:07 am
சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain possibility one or two places in tamilnadu
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, குமரி கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்துள்ளது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது வளிமண்டலத்தில் இறங்கி குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாகவும் மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி