ஆப்நகரம்

தமிழகம் ,புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 4 Oct 2018, 11:33 am
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்குமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil HY-02RAIN


லட்ச தீவுப்பகுதியில் , வளிமண்டலத்தில் சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலம், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 5மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, மதுரை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி,அரியலூர், திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நாகை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் லட்ச தீவுப்பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவியுள்ளதால், மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீட்டிகும் என்றுவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்தென்கிழக்குவங்கக்கடலில் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதியில்வளிமண்டலத்தில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால், சில இடங்களில் கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி