ஆப்நகரம்

தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 16 Oct 2016, 11:54 am
சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain will continue today also in tamilnadu says chennai meteorology
தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்


தெலங்கானாவைத் தொடர்ந்து கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மேலடுக்கு சுழற்சி உருவானது. இதன் காரணமாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், லட்சத்தீவு பகுதியின் வளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கும் நிலையில், தென்மேற்கு வங்க கடலை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதியிலும் புதிதாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைய உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி