ஆப்நகரம்

மீண்டும் ரவுண்டு கட்டப் போகும் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பற்றிய முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 Dec 2020, 12:22 pm
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tn rain update


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் (டிசம்பர் 15) கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் டிசம்பர் 18 வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சித்ரா நடித்த முதல் படம்; மறைந்த பிறகு வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

ஊரடங்கில் அடுத்த கட்ட தளர்வு: மக்கள் உற்சாக வரவேற்பு!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

பாஜகவுக்கு 60 சீட்: என்ன செய்ய போகிறது அதிமுக?

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சி பாறையில் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி