ஆப்நகரம்

ஊரடங்கில் முக்கிய தளர்வு: குளிர்சாதன பேருந்துகள் இயக்க அனுமதி!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Sep 2021, 1:02 pm
கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதிப்பு கட்டுக்குள் வந்தபின்னர் பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டன.
Samayam Tamil SETC


இருந்தபோதும் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அரசு குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்தாண்டு மே 10ஆம் தேதி முதல் குளிர்சாதனப் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டன. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து மீண்டும் சேவையை தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு: பின்வாங்குகிறதா அரசு, காரணம் என்ன?

இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன், “வருகின்ற அக்.1 முதல் தமிழக அரசின் 702 குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படவுள்ளன. மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளும் இயக்கப்படும்” என்று கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த போதும் கடந்த சில தினங்களாக லேசாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 1745 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 222 பேருக்கும் கோவையில் 226 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அடுத்த செய்தி