ஆப்நகரம்

இலங்கை பிரதமராக ராஜபக்சே; மத்திய அரசு உஷாராக இருக்க தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!

சென்னை: ராஜபக்சே பதவியேற்றுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளன.

Samayam Tamil 27 Oct 2018, 5:19 pm
இலங்கையில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றத்தால் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கே, நீக்கம் செய்யப்பட்டதாக அதிபர் சிறிசேனா கூறினார். இது தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Rajapakse


அண்டை நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வை கண்காணிக்குமாறு, மத்திய அரசிற்கு தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் ராஜபக்சே எதிரி.

கடந்த 2009ல் ஈழப்போர் முடிவுற்ற போது, ஏராளமான தமிழர்களை சொந்த மண்ணில் கொன்று குவித்தார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ராஜபக்சே தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், நமக்கு அருகில் உள்ள தீவில் நடப்பவற்றை கண்டுகொண்டு மத்திய அரசு பார்க்க வேண்டும். ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ராஜபக்சே மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

ஈழப் போரின் போது ராஜபக்சே தான் அதிபராக இருந்தார். அப்போதைய அரசில் சிறிசேனாவும் ஒரு அங்கமாக இருந்தார். இவர்கள் இருவரும் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி