ஆப்நகரம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் மேலும் ஒரு பொருள் சேர்ப்பு: சர்ப்ரைஸ் தந்த அமைச்சர்

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் புதிய பொருள் சேர்க்கப்பட்டுள்ளதை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு

Samayam Tamil 3 Jan 2021, 3:31 pm
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரிசி அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையை இரண்டரை மடங்காக உயர்த்தியுள்ளது அதிமுக அரசு. அதன் படி வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு குடும்ப அட்டைக்கு ரூ. 2500 டோக்கன் முறையில் வழங்கப்படவுள்ளது. அதற்கான டோக்கன் விநியோகம் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil file pic


பரிசு தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீளக் கரும்பு அடங்கும். மேலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஒரு கோடியே 80 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக தமிழக அரசு சார்பில் 484 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் 100 கிராம் ஆவின் நெய் வழங்கப்படும் என பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.

பொங்கலன்று மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சலசலப்பு: அரசு முடிவு என்ன?

நேற்று பழனி முருகன் கோவிலுக்கு சென்றவர் ரோப் கார் மூலம் மலை கோவிலுக்குச் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், ''முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் 100 கிராம் ஆவின் நெய் சேர்க்கப்படும்.

நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையான மனிதர். உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர் அரசியலில் இருந்து பின்வாங்கியுளார். அவருடைய ஆன்மீக அரசியலை கிண்டல் கேலி செய்யும் திமுகவுக்கு ரஜினி ரசிகர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள்'' என இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி