ஆப்நகரம்

ஆவின் பால் விலையை உயர்த்த அரசு திட்டம்- ராஜேந்திர பாலாஜி

சென்னை: ஆவின் பால் விலை உயர்த்தப்படக்கூடும் என்கிற கவலை மக்களிடையே நிலவி வரும் நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Jun 2019, 6:06 pm
இன்று (ஜூன் 1) முதல் தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil ஆவின் பால் விலையை உயர்த்த அரசு பரிசீலனை- ராஜேந்திர பாலாஜி
ஆவின் பால் விலையை உயர்த்த அரசு பரிசீலனை- ராஜேந்திர பாலாஜி


ஆவின் பால் விலையை உயர்த்தப்படுவதை குறித்து தமிழக அரசு பரிசிலீத்து வருவதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று (ஜூன் 1) முதல் ஆரோக்யா, ஹெரிட்டேஜ் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொள்முதல் விலை உயர்வால் பால் விலை உயர்த்தப்படுவதாக ஆரோக்யா, ஹெரிட்டேஜ் நிறுவனங்கள் தங்களது முகவர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன.

அதன்படி, ஆரோக்கியாவின் புல்கிரீம் தன்மை கொண்ட ஒரு லிட்டர் பால் ரூ. 54ல் இருந்து ரூ. 56-ஆக விலை உயர்ந்துள்ளது. சமன்படுத்தப்பட்ட ஆரோக்கியா பால் ரூ. 42ல் இருந்து ரூ. 44-ஆக விலை உயர்ந்துள்ளது. ஹெரிட்டேஜ் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ. 48ல் இருந்து ரூ. 50-அக விலை உயர்ந்துள்ளது. கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட பால் ரூ. 52ல் இருந்து ரூ. 54-ஆக விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் விலையையும் உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். இதுபொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இன்று உலக பால் தினம் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி, ஆவின் பாலகங்களில் பால் பொருட்களுக்கு இன்று மட்டும் 5 சதவீத சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி