ஆப்நகரம்

சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் : பட்டையை கிளப்பும் ரஜினி மக்கள் மன்றம் !!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

Samayam Tamil 8 Dec 2019, 10:52 pm
நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்த நாள், வரும் 12 ஆம் தேதி (டிசம்பர் 12) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Samayam Tamil ரஜினி பிறந்த நாள்: பட்டையை கிளப்பும் மக்கள் மன்றம்!!


"தான் அரசியலுக்கு வருவது உறுதி" என கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ரசிகர்கள் சந்திப்பில் அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதன் பிறகு தன்னுடைய ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றினார்.

ராமநாதபுரம்: நீதிபதி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர்!

அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் அவ்வப்போது ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கூட தமிழகம் முழுவதிலும் கடும் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி அவரின் 70ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டன.

கமுதி பகுதியில் மரங்கள் வளர்த்து வரும் தன்னார்வலர் ஒருவருக்கு விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அத்துடன், கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த உக்கிரபாண்டி என்பவர், நாள்தோறும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு தன் சொந்த செலவில் விலங்கினங்களுக்கு இரை வைத்து பாதுகாத்து வருகிறார். அவரும் விழா மேடையில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.

சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலரை கம்பி எண்ண சொன்ன நீதிபதி !!

இந்த விழாவில், ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்றத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி