ஆப்நகரம்

மிரட்டல் தொனியில் பேசியிருந்தால் வருந்துகிறேன் - ரஜினி

பத்திரிக்கையாளர்களின் மனதை புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை என ரஜினி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 May 2018, 7:47 pm
சென்னை : பத்திரிக்கையாளர்களின் மனதை புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை என ரஜினி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rajini


ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போரடிய போது கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகினர். இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தூத்துக்குடி சென்று காயமடைந்தவர்களை நலம் விசாரித்தனர்.

சமூக விரோதிகள் :
கலவரத்தின் போது காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய ரஜினி, போராட்டத்தின் போது சமூக விரோதிகள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால் தான் கலவரமானது. என தெரிவித்தார்.

பின்னர் ரஜினி பேச்சு குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர். அது குறித்து சென்னை விமானநிலையத்தில் ரஜினியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அப்போது ரஜினி மிக ஆக்ரோசத்துடனும், கோபத்துடனும் பேசினார்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்களை புண்படும்படி ரஜினி பேசியதாக பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ரஜினி வருத்தம்:
இந்நிலையில் ரஜினி தன் டுவிட்டரில், “விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி