ஆப்நகரம்

அப்பா முதல்வர் ஆகனும்! ரஜினியின் மகள் பிரார்த்தனை

நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஆக வேண்டும் என்று அவருடைய மகள் ஐஸ்வர்யா தனுஷ், நெல்லை ஸ்ரீநரசிங்க பெருமாள் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார்.

Samayam Tamil 3 Feb 2018, 11:48 pm
நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஆக வேண்டும் என்று அவருடைய மகள் ஐஸ்வர்யா தனுஷ், நெல்லை ஸ்ரீநரசிங்க பெருமாள் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார்.
Samayam Tamil rajinikanth daughter aishwarya prays for fathers political victory
அப்பா முதல்வர் ஆகனும்! ரஜினியின் மகள் பிரார்த்தனை


அரசியல் தலைவர்கள் பெரும்பாலேனோர் வழிபடும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குவது நெல்லை ஸ்ரீநரசிங்க பெருமாள். வழக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை பெறுவது, பதவி உயர்வு பெறவது உள்ளிட்ட அரசியல் விவகாரத்துக்காக இங்கு வேண்டினால், அது நிறைவேறும் என்பது ஐதீகம்.

இந்நிலையில், இந்த கோவிலைப் பற்றி தகவல் அறிந்த நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று விஜயம் செய்தார்.

அங்கு அவர், தந்தை ரஜினகாந்த் பெயரிலும், கணவர் தனுஷ் பெயரிலும் அர்ச்சனை செய்தார்.

தொடர்ந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்த ஐஸ்வர்யா, அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து கொண்டு தியானம் செய்தார்.

அடுத்த செய்தி