ஆப்நகரம்

உயிருக்கு ஆபத்து என்பதால் ரஜினி அரசியல் கட்சி துவங்கவில்லை?

அரசியல் கட்சி ஆரம்பித்தால் என் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுவதால் கட்சி துவங்க வில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

Samayam Tamil 27 Oct 2020, 9:42 pm
பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
Samayam Tamil ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்


எனினும், தற்போது வரை ரஜினி கட்சி தொடங்கவில்லை. ஆனால், வரூகிற நவம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்குகிறார் என்றும், டிசம்பரில் மதுரையில் மாநாடு நடத்துகிறார் என்றும் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னரும் இதே போன்று பல்வேறு வதந்திகள் வெளியாகினாலும், வழக்கம் போல் ரஜினியின் அரசியல் வருகை குறித்த தகவல்களால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

இதனிடையே, ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரிந்து விடும்: வெளியான முக்கிய தகவல்!

இந்த நிலையில், அரசியல் கட்சி ஆரம்பித்தால் ஏற்கனவே மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்ட என் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுவதால் இப்போது கட்சி துவங்க இயலவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து ரஜினி தரப்பில் கேட்கப்பட்ட போது, சமூக வலைதளங்களில் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று வெளியாகி வரும் தகவல் வெறும் வதந்தியே என்றும், ரஜினிகாந்த் அதுபோன்று எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் உறுதி படுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி