ஆப்நகரம்

இன்று பரோலில் வெளியே வருகிறார் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி சிறையில் இருந்து இன்று பராலில் வெளியே வருகிறார்.

Samayam Tamil 25 Jul 2019, 8:58 am
மகளின் திருமண தேவைக்காக 6 மாதம் பரோல் கோரியிருந்த நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார்.
Samayam Tamil Nalini.


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி தனது மகளின் திருமண தேவைக்காக 6 மாத காலம் பரோல் வேண்டும் என்று கேட்டிருந்தார். இந்த வழக்கில் தாமே வாதாடிய நளினி, எனது மகளுக்காக நான் தற்போது வரை எந்தவொரு சம்பிரதாய சடங்குகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே திருமணத்திற்காக 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

Also Read: தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நளினியின் கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒரு மாதம் பரோல் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்குவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நளினி இன்று பரோலில் வெளியே வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also Read: சிலை கடத்தலில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு- பொன்.மாணிக்கவேல்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவுள்ள நளினி அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது. ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. நளினியின் வருகையால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி