ஆப்நகரம்

பரோலில் விடுங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல மாட்டேன்: நளினி மனு தாக்கல்

பரோலில் வந்தால் வெளிநாட்டிற்கு செல்ல மாட்டேன் என ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி கூறியுள்ளார்.

TNN 7 Dec 2017, 6:06 pm
பரோலில் வந்தால் வெளிநாட்டிற்கு செல்ல மாட்டேன் என ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி கூறியுள்ளார்.
Samayam Tamil rajiv murder case nalini file a petition for parole in high court
பரோலில் விடுங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல மாட்டேன்: நளினி மனு தாக்கல்


உயர்நீதிமன்றத்தில் நளினி விளக்க மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: பரோலில் வந்தால் வெளிநாட்டிற்கு செல்ல மாட்டேன். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டது போல தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாத காலம் பரோல் தர வேண்டும் என்று நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.

நளினி தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க முடியாது என்று தமிழக உள்துறை பதில் மனு தாக்கல் செய்தது. 6 மாதம் பரோலில் அனுப்பினால் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.


26 ஆண்டுகள் சிறையில் உள்ளதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதால், நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி