ஆப்நகரம்

நளினி - முருகன் சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக் குற்றவாளி தம்பதிகளான நளினி - முருகன் ஆகியோர் சந்தித்தனர்.

TNN 18 Dec 2016, 5:01 pm
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக் குற்றவாளி தம்பதிகளான நளினி - முருகன் ஆகியோர் சந்தித்தனர்.
Samayam Tamil rajiv murderers nalini murugan met in vellore prision
நளினி - முருகன் சந்திப்பு


கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ம் தேதியன்று, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 49 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 ஆண்டுகாலம் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கணவன் மனைவியான நளினி - முருகன் தம்பதியினர், 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகின்றனர். அதன்படி, வேலூர் சிறையில், அவர்கள் இருவரும் சந்தித்தனர்.

பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு முருகனை அழைத்து வந்த போலீசார், சந்திப்பு முடிந்ததும், மீண்டும் ஆண்கள் சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.
Rajiv Murderers Nalini - Murugan met in Vellore Prision

அடுத்த செய்தி