ஆப்நகரம்

எம்பி ஆசை: அதிமுகவை அலறவிடும் மிஸ்சஸ் விஜயகாந்த, பாமக ஆட்டம் வேறு!

மாநிலங்களவை எம்பிக்கள் 6பேர் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் அதிமுக சார்பாக ராஜ்யசபா செல்ல கடும் போட்டி நிலவி வருகிறது.

Samayam Tamil 25 Feb 2020, 2:54 pm
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சென்ற 6 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்படி அதிமுக சார்பாக மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்து வந்த சசிகலா புஷ்பா, முத்துகறுப்பன், கே செல்வராஜ், விஜிலா சத்தியானந்த் ஆகிய 4 பேரின் பதவிக் காலம் முடிவடைகிறது.
Samayam Tamil 1552733186-edapadi_meets_vijayakanth_march_16


மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 6ஆம் தேதி தொடங்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தேர்தல் தேவைப்பட்டால் மார்ச் 26ஆம் தேதி நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மக்களவைத் தேர்தலின்போது கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டு பாமகவிற்கு ஒரு மாநிலங்களவையை அதிமுக ஒதுக்கியிருந்தது. தேர்தலில் பாமக கைகொடுக்கவில்லை என்றபோதும், ஒப்பந்தத்தின்படி ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்காக பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தயாராக உள்ளார்.

காலியாகுது 6 எம்பி பதவி... 6 வேட்புமனு தாக்கல் 26 முடிவு!

மீதமுள்ள 3 எம்பி சீட்களை அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு வழங்கப்படும் என அதிமுக அதிகாரப்பூர்வ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தனக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வேண்டும் என தேமுதிக பொருளாளரும், கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்பே, இதுத் தொடர்பாக தேமுதிக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. கூட்டணி ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி அதிமுக பிரேமலதாவைச் சமாதானப்படுத்தி அமைதிப்படுத்தியது என அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகின.

இந்த சூழலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனக்கு எம்பியாக வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக உள்ளதாகவும், அதனால் இந்த வாய்ப்பை அளித்தால் கூட்டணியில் தொடருவோம் என அதிமுகவிற்கு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீனாட்சி கோயில் சொத்து சண்டை, திமுக பாஜகயிடையே வார்த்தை போர்!

இதற்கிடையே கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, மாநிலங்களவை எம்பி சீட்டை பெற்றுக் கொண்டு கூட்டணியிலிருந்து கழன்று விடும் என்ற தகவலும் அதிமுகவிற்குக் கிடைத்துள்ளதாம். இந்த தகவலை அதிமுக அரசுக்கு உளவுத்துறை வழங்கியுள்ளதாம்.

இந்த தகவல்களை அறிந்தும் அதிமுக தொடர்ந்து அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறதாம். தேமுதிகவுடனான கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை, கட்சியினருக்கு மட்டுமே இந்த முறை முன்னுரிமை அளிக்க முடியும் என அதிமுக தலைமை பிடிவாதமாக உள்ளதாம். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து சில காலத்தில் தேமுதிக வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அடுத்த செய்தி