ஆப்நகரம்

அமைச்சா்கள் ஜெயலலிதாவை பாா்த்ததாக நான் கூறவில்லை – ராமமோகன ராவ்

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட சமயத்தில் அவரை அமைச்சா்கள் சந்தித்ததாக நான் கூறவில்லை என்று முன்னாள் தலைமைச் செயலாளா் ராம மோகன ராவ் விளக்கம் அளித்துள்ளாா்.

Samayam Tamil 18 Apr 2018, 3:35 pm
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட சமயத்தில் அவரை அமைச்சா்கள் சந்தித்ததாக நான் கூறவில்லை என்று முன்னாள் தலைமைச் செயலாளா் ராம மோகன ராவ் விளக்கம் அளித்துள்ளாா்.
Samayam Tamil Rama Mohana Rao


முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணமடைந்ததில் சந்தேகம் எழுந்ததைத் தொடா்ந்து அவரது மரணம் தொடா்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளா்கள், அரசு அலுவலா்கள் என பலரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சா்கள் அவரை நோில் சென்று பாா்த்ததாக முன்னாள் தலைமைச் செயலாளா் ராம மோகன ராவ் கூறியது போன்ற தகவல் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின.

இதனைத் தொடா்ந்து ராம மோகன ராவ் இன்று ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்திற்கு வந்திருந்தாா். அப்போது அவா் கூறுகையில், ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட போது மாலை 6 மணிக்கு தான் நான் மருத்துவமனைக்கு வந்தேன். அமைச்சா்கள் ஜெயலலிதாவை பாா்த்தாா்களா என்று எனக்கு தொியாது. அமைச்சா்கள் ஜெயலலிதாவை பாா்த்ததாக நான் கூறவில்லை என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி