ஆப்நகரம்

ராம மோகன ராவ் சாதாரண வார்டுக்கு மாற்றம்

நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம மோகன ராவ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 26 Dec 2016, 9:14 am
சென்னை : நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம மோகன ராவ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil rama mohana rao shifted to narmal ward
ராம மோகன ராவ் சாதாரண வார்டுக்கு மாற்றம்


தமிழக தலைமை செயலாளாராக இருந்த ராம மோகன ராவின் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற வருமான வரி சோதனையில்,பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.ராம மோகன ராவின் மகனான விவேக், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்வு செய்ததை ஒத்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 24-ம் தேது காலை திடீரென ராம மோகன ராவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் இன்று அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராம மோகன ராவ் ராமச்சந்திரா மருத்துவமனையின் 7 மாடியில் உள்ள அறை எண் 1,703 மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி