ஆப்நகரம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்: 54 பேருக்கு ஊதியம் மறுப்பு - ராமதாஸ் கண்டனம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் 54 பேருக்கு பிப்ரவரி ஊதியம் மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 17 Mar 2023, 12:30 pm
தமிழ்நாடு அரசின் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் உதவி திட்ட அலுவலர்களாக பணியாற்றும் 54 பேருக்கு பிப்ரவரி ஊதியம் மறுக்கப்பட்டதோடு பணி நீக்கம் செய்வது அநீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Samayam Tamil ramadoss pmk


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழக அரசின் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் உதவி திட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்ட 54-க்கும் மேற்பட்டோருக்கு பிப்ரவரி மாத ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த மாதத்துடன் பணி நீக்கப்படவுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது!

2007-ம் ஆண்டு பணியில் சேர்ந்து 13 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வரும் உதவி திட்ட அலுவலர்கள் பணி நிலைப்பு கோருகிறார்கள். ஆனால், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமோ அவர்களை திட்டம் சார்ந்த ஒப்பந்த பணியாளர்களாக மாற்ற முயல்கிறது. அது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்!
நெல்லையில் உச்சபட்ச கமிஷன் வசூல்: மாவட்டத்தையே இரண்டாக பிரிக்கும் திமுக நிர்வாகிகள்!
பணி நிலைப்பு கோரி 54 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஆணையிட்டது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நிர்வாகம் அவர்களின் ஊதியத்தை நிறுத்தி விட்டது. திட்ட ஒப்பந்த பணியாளர்களாக மாற மறுத்தால் பணி நீக்கப்படுவர் என அறிவித்திருக்கிறது!
​ஒப்பந்த ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!
13 ஆண்டுகளாக உழைத்த பணியாளர்களின் உரிமைகளை பறித்து பணிநீக்குவது அநீதி. அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதில் அரசு தலையிட்டு, அவர்களின் 13 ஆண்டு உழைப்பை மதித்து, உயர்நீதிமன்ற அறிவுரைப்படி, அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி