ஆப்நகரம்

தமிழர்களை தாக்கிய 'கொரோனா வைரஸ்'..! மத்திய அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்...

சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் உட்பட இந்திய மாணவர்களுக்கு அவசர உதவிகள் வழங்குமாறு ராமதாஸ் இந்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 25 Jan 2020, 2:03 pm
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் காய்ச்சலால் 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டில் இருப்பவர்கள் யாரும் வுகான் நகருக்கு தற்போதைய சூழலில் வருகை தரக்கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Samayam Tamil தமிழர்களை தாக்கிய கொரோனா வைரஸ் மத்திய அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்


மேலும், சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் பயணிகள், விமான நிலையத்திலேயே மருத்துவ சோதனை நடத்தப்பட்ட பிறகுதான் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸால் இதுவரை சீனாவில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சீனாவில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் 25 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மத்திய அரசு பள்ளியில் ஆசிரியர் பணி..! பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

இதையடுத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது '' சீனாவில் கொரோனாவைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வூகான் நகரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 25 இந்திய மாணவர்கள் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இரு நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட வேண்டும். சீனாவின் வூகான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவது நல்லதா, அங்கேயே பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நல்லதா? என்பதை அவர்களின் விருப்பத்தை அறிந்து இந்திய அரசு உதவ வேண்டும் '' என இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி