ஆப்நகரம்

தினக் கூலிகளை பணி நிலைப்பு செய்ய வலியுறுத்தல்: ராமதாஸ்

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தினக்கூலிகளாக பணியாற்றுபவர்கள் அனைவரையும் அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 16 Mar 2023, 1:40 pm
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தினக்கூலி பணியாளர்களை குத்தகை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றிய ஆணையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Samayam Tamil ramadoss


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: ''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 2006ம் ஆண்டில் அமர்த்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றி வந்த ஏராளமானோர், அவர்களுக்கே தெரியாமல் குத்தகை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இது நியாயமற்றது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றிய அவர்கள், தங்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும் என்று 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தினக்கூலி பணியாளர்களாக நீடித்தால் அவர்கள் பணி நிலைப்பு கோருவார்கள் என்பதால், அதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. இது தினக்கூலி பணியாளர்களை உரிமையற்றவர்களாக மாற்றும் செயல் ஆகும். இச்செயல் இயற்கை நீதிக்கும் எதிரானது.
பேசுவதற்கு நிறைய இருக்கிறது, ஆனால்.. - மன வேதனையை வெளிப்படுத்திய திருச்சி சிவா
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தினக்கூலி பணியாளர்களை குத்தகை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றிய ஆணையை அரசு ரத்து செய்ய வேண்டும். மாறாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக பணியாற்றும் அவர்கள் அனைவரையும் அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி