ஆப்நகரம்

கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் – ராமதாஸ்

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பா.ம.க. தலைவா் ராமதாஸ் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 19 Nov 2017, 3:11 pm
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பா.ம.க. தலைவா் ராமதாஸ் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil ramadoss says apologies to tamilnadu people
கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் – ராமதாஸ்


கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டதாகவும், அவற்றுக்கு மாற்றாக பா.ம.க. தலைமையில் கட்சிகள் இணைய வேண்டும் என்றும் ராமதாஸ் கூறினார். ஆனால் பா.ஜ.க.வுக்கு அழைப்பில்லை என்ற அவர் விடுதலைச் சிறுத்தைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சிரித்துவிட்டுச் சென்றார்.

தமிழக அரசின் கோடிக்கணக்கான ரூபாய் கடன் மற்றும் அதற்கான வட்டி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி முடங்கிவிட்டதாக அவர் தெரிவித்தார். பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைந்தால் அன்புமணியால் தமிழக அரசின் கடனை அடைத்துவிட முடியுமா என்ற கேள்விக்கு, செய்தியாளர் தனியாக வருமாறும் அது குறித்து ஒருமணி நேரம் பேசத் தயாராக இருப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும், கடந்த 50 ஆண்டுகளாக தொடா்ந்து மாறி மாறி ஆட்சியில் இருந்து வரக்கூடிய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ராமதாஸ் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி