ஆப்நகரம்

உத்தரகண்ட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: ராமதாஸ் கண்டனம்

உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்பட்டதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்

TNN 28 Mar 2016, 12:42 pm
சென்னை: உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்பட்டதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ramadoss slams central government for imposing presidents rule in uttarkhand
உத்தரகண்ட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: ராமதாஸ் கண்டனம்


இது குறித்து அவர் தனது டிவிட்டர் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, "உத்தரகண்டில் காங்கிரஸ் அரசு கலைப்பு. குடியரசுத் தலைவர் ஆட்சி: ஜனநாயகத்தை மதிக்காத சர்வாதிகாரம் ஒரு போதும் வெல்லாது.

உத்தரகண்டில் குடியரசுதலைவர் ஆட்சி: அருணாச்சல பிரதேசத்தில் உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கியும்மத்திய அரசு திருந்தவில்லை என்பதற்கு உதாரணம்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

முன்னதாக, நேற்று உத்தரகண்ட் மாநில ஆளுநர் கே. கே. பாலின் அறிக்கையை ஏற்று, உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி