ஆப்நகரம்

அரசு அலுவலர்களுக்கே இந்த நிலை...!

“எங்களை அசிங்கமாகத் திட்டுகிறார்.., கோப்புகளை முகத்தில் தூக்கி எரிகிறார்...”

Samayam Tamil 11 Nov 2019, 1:59 pm
மாவட்ட வருவாய் அலுவலரின் ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கம் காலவரையற்ற உண்ணாமல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil WhatsApp Image 2019-11-11 at 12.19.26 PM.


ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் குளறுபடிகள் இருப்பதாகப் பல ஆண்டுகளாகக் குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை ஊழியர்கள் கூறுகையில், தங்களை உயர் அதிகாரிகள் தரக்குறைவாகப் பேசுவதாகக் குற்றம் சாட்டினர்.

மழைக்கு வாய்ப்பான இடங்கள்: உங்க ஊர் இருக்கான்னு பார்த்துக்கோங்க!

இதுகுறித்து ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது, “வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட வருவாய் அலுவலர்கள் அனைவரையும் தரக்குறைவாகப் பேசுகிறார். அலுவலகத்தில் உள்ள பையில்களை ஊழியர்கள் முகத்தில் தூக்கி வீசுகிறார். இது எங்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறது” என்றார்.

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

இந்நிலையில், ராமநாதபுரத்தில் பணியாற்றி வரும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியைக் கண்டித்து, மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த போராட்டத்தின் வழியாக, முத்துமாரியைப் பணி இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த சங்கத்தினர் முன் வைத்துள்ளனர். போராட்டம் தொடங்கியபோது மழை பெய்யத் தொடங்கியது. எனினும், ஊழியர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி