ஆப்நகரம்

ராமநாதபுரத்தில் உதவி ஆய்வாளரை கொல்ல முயன்ற இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

ராமநாதபுரத்தில், முன்விரோதம் காரணமாக, காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்த இளைஞருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

TNN 15 Oct 2016, 9:47 pm
ராமநாதபுரத்தில், முன்விரோதம் காரணமாக, காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்த இளைஞருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ramanathapuram youth who tried to kill si convicted for 3 years jail
ராமநாதபுரத்தில் உதவி ஆய்வாளரை கொல்ல முயன்ற இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் உதவி ஆய்வாளர் செல்லபாண்டியன் சென்றார். அப்போது பின் தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கருப்பையா என்பவர் செல்லபாண்டியனை வெட்டிவிட்டு, தப்பியோடினார். இதில், அவரது வலது காது துண்டானது.

இதுபற்றி உச்சிப்புளி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர். இதன்பேரில் ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில், கருப்பையாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயராஜ் தீர்ப்பளித்தார்.

அடுத்த செய்தி