ஆப்நகரம்

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 5 Oct 2016, 9:26 pm
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil rameshwaram school girl dies in doubt full manner
ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு


அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்த புவனா என்ற மாணவியே உயிரிழந்தவர். இன்று வழக்கம்போல, பள்ளிக்குச் சென்று புவனா, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக, பள்ளி நிர்வாகம் தரப்பில் உரிய விளக்கம் தரப்படவில்லை என்பதால், மாணவியின் சாவில் மர்மம் உள்ளதாகக் கூறி, அவரது உறவினர்கள் அப்பகுதியில் திடீர் போராட்டம் மேற்கொண்டனர். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி