ஆப்நகரம்

செம... அப்துல் கலாமை எப்படிலாம் கொண்டாடுறாங்க பாருங்க...

ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது உருவத்தில் 6 அடி உயர கேக் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Feb 2020, 8:54 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று பிரபலமானவர்களின் உருவங்களை கேக்காக செய்து வைத்து வாடிக்கையாளர்களைக் கவர்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.
Samayam Tamil 54a3b341753a8fe715cfdeac6a95db34_XL


இந்நிலையில் இந்த நிறுவனம் புதிதாகக் கிளை ஒன்றை ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பு பகுதியில் அமைத்துள்ளது. அதாவது இந்த பேக்கரி, அப்துல்கலாம் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளது..


இதனிடையே, கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது உருவத்தில் ஆறு அடி உயரத்தில் கேக் ஒன்றைத் தத்ரூபமாகச் செய்து கடை வாசலில் வைத்துள்ளது.

ஆண் மகனை அடித்து துவைக்கும் பெண் சிங்கம்!!

இந்த அப்துல் கலாம் உருவ கேக்கை கலாமின் அண்ணனுடைய வாரிசு ஷேக் சலீம் திறந்து வைத்தார். கடை வாசலில் வைக்கப்பட்டுள்ள இந்த கேக்கை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

nirbhaya case: தப்பிக்க வழி தேடும் குற்றவாளிகள்... தாயின் வேதனை..!

250 கிலோ எடையுள்ள இனிப்புகளாலும், 300 முட்டைகளையும் பயன்படுத்தி ஒன்பது பணியாளர்கள் 12 நாள்கள் உழைத்து இந்த கேக்கை உருவாக்கி உள்ளதாக பேக்கரி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இந்த கேக் 30 நாட்கள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி