ஆப்நகரம்

மணற்சிற்பம் அமைத்து விழிப்புணர்வு; இனியாவது திருந்துங்க மக்களே - ராமேஸ்வரம் போலீஸ்!

சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் போலீசார் செயல்பட்டுள்ளனர்.

Samayam Tamil 9 Feb 2019, 6:37 pm
தனியார் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் காற்று மாசுபாடும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் சாலை விதிகளைப் பின்பற்றாமல் செய்யும் பயணங்களால் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன.
Samayam Tamil Road Safety


இதனைத் தடுக்க காவல்துறை, நீதிமன்றம் ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 959 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் 75% உயிரிழப்புகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டவை ஆகும்.

எனவே இரு சக்கர வாகனங்கள் பாதுகாப்பாற்ற ஒன்றாக திகழ்கின்றன. தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி கனரக வாகனங்கள், பேருந்துகளை விபத்தின்றி இயக்குதல், சீட் பெல்ட் அணிதலின் அவசியம், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற 30வது சாலை பாதுகாப்பு வார விழாவில், ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதற்கு டிஐஜி காமினி முன்னிலை வகித்தார்.

மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. இதனை பரமக்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் சரவணன் அமைத்திருந்தார். இந்தச் சிற்பத்தை ஏராளமானோர் பார்வையிட்டு சென்றனர்.

அடுத்த செய்தி