ஆப்நகரம்

திருவண்னாமலையில் வசிக்கும் வெளிநாட்டினர் விவரங்களை சேகரிக்கும் காவல்துறை..!!

திருவண்ணாமலையில் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்த விவரங்களை திரட்டி சமர்பிக்கும்படி காவல்துறைக்கு அம்மாவட்ட மாஜிஸ்திரேட் ஜி. மகிழேந்தி உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 18 Jul 2018, 5:59 pm
திருவண்ணாமலையில் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்த விவரங்களை திரட்டி சமர்பிக்கும்படி காவல்துறைக்கு அம்மாவட்ட மாஜிஸ்திரேட் ஜி. மகிழேந்தி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil indian_russian_tiruvannamalai_overstay_cover_pic
ரஷ்ய பெண் வன்கொடுமை: வெளிநாட்டினர் விவரங்களை சேகரிக்கும் காவல்துறை


ஆன்மீக தேவைக்காக திருவண்ணாமலையில் தங்கியிருந்த ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அதற்காக அப்பெண் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ரஷ்ய பெண்ணை மாஜிஸ்திரேட் ஜி. மகிழேந்தி மருத்துவமனையில் சென்று சந்தித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரஷ்ய பெண்ணுக்கு வழங்கப்படும் என்றார்.

மேலும் திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வெளிநாட்டினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் படி அதிகாரிகளுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 15 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் மும்பையிலிருந்து கடந்த 3ம் தேதி ரஷ்யப்பெண் திருவண்னாமலை வந்ததாகவும், அவர் ஆக்ஸ்டு 8 வரை இந்தியாவில் தங்க திட்டமிருந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்த செய்தி