ஆப்நகரம்

அமைச்சர் கொடுத்த உறுதி: முடிவுக்கு வந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்!

அரசின் உத்தரவாதத்தை ஏற்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Samayam Tamil 11 Jun 2022, 11:43 am
ரேஷன் கடை ஊழியர்கள் அமைச்சர் கொடுத்த உறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
Samayam Tamil ration shop


தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும், ஒருவார காலத்திற்குள் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப் படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது. எனினும், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆற்காடு வீராசாமி: வருத்தம் தெரிவித்த பாஜக அண்ணாமலை
நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதன் மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

எனவே, நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்? முதல்வர் நடத்தும் ஆலோசனை!
இந்நிலையில் அரசின் உத்தரவாதத்தை ஏற்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி