ஆப்நகரம்

Gaja cyclone: கஜா புயலால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்?

சென்னை: தெற்கு ஆந்திரா- வடதமிழகத்திற்கு இடையே கரையை கடக்கும் கஜா புயலால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Nov 2018, 10:58 am
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு கஜா புயல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 6


வடமேற்கு திசையை நோக்கி நகரும் இந்த கஜா புயல், 2, 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை இந்த கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். வரும் 15ம் தேதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து வரும் 14ம் தேதி மாலை முதல் தெற்கு ஆந்திரா- வடதமிழகத்திற்கு இடையே, இந்த கஜா புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி