ஆப்நகரம்

மதுரையில் உற்சாகத்துடன் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

மதுரை மாவட்டம் மேலூரில் ரேக்ளா பந்தயம் உற்சாகத்துடன் நடைபெற்றது. ரேக்ளா வண்டிப் பந்தயம் என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம். மதுரை மாவட்டம் மேலூரில் ரேக்ளா பந்தயம் உற்சாகத்துடன் நடைபெற்றது. ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

Samayam Tamil 2 Jun 2019, 10:59 am
மதுரை மாவட்டம் மேலூரில் ரேக்ளா பந்தயம் உற்சாகத்துடன் நடைபெற்றது.
Samayam Tamil 155945206263798


ரேக்ளா வண்டிப் பந்தயம் என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம் ஆகும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கொங்கு நாட்டிலும் இந்த வகைப் பந்தயங்கள் நடைபெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற ரேக்ளா வண்டிப் பந்தயங்கள் பரவலாக நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வகை போட்டிகளில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்படுகின்றன. நீலகிரி மாவட்டப் பகுதிகளில் எருமைக் கடாவையும் பந்தயங்களில் ஈடுபடுத்துகின்றனர்.

மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 47 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகளை சாலைகளின் இருப்புறமும் கூடி இருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

அடுத்த செய்தி