ஆப்நகரம்

சசிகலா குடும்பத்தில் இப்படியொரு அதிர்ச்சி; சுற்றி வளைத்த போலீஸ்!

கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் நெருங்கிய உறவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Jan 2021, 2:28 pm
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் அண்ணன் ஜெயராமன் மனைவி இளவரசி -யும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் 27ஆம் தேதி விடுதலை ஆகிறார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமன்.
Samayam Tamil Arrest


இவரது மாமனார் பாஸ்கர் என்கிற ’கட்டை’ பாஸ்கர். சென்னையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார். தனது மகளை ஜெயராமனின் மகன் விவேக்கிற்கு திருமணம் செய்து கொடுத்த பிறகு வியாபாரத்தை முழுவதுமாக சகோதரர் சிட்டி ராஜாவிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறியுள்ளார்.

சசிகலா விடுதலையில் பெரிய சிக்கல்: டெல்லி பறந்த தினகரன்?

ராஜா மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பின்னர் பாஸ்கர் மீண்டும் வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

இதற்கிடையில் ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் விவகாரம் தொடர்பாக பாஸ்கர் மீது 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆந்திர மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் சென்னை போலீசாரின் உதவியுடன் ஆந்திர போலீசார் அதிரடியான நடவடிக்கையில் இறங்கினர்.

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஓடிடியில் வெளியாகிறது!
அதாவது சென்னை அண்ணா நகர் இல்லத்தில் தங்கியிருந்த பாஸ்கரை கைது செய்துள்ளனர். அவரை மேல் விசாரணைக்காக ஆந்திர மாநிலத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அடுத்த செய்தி