ஆப்நகரம்

தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு!

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Aug 2018, 11:07 am
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Samayam Tamil tb2


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 16,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

இதனால் வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று நீர் திறப்பு 7,000 கன அடியாக இருந்தது.

இருப்பினும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்காக மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதில் வருவாய், காவல்துறையும் இடம்பெற்றுள்ளனர்.

24 மணி நேரமும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பாபநாசம், அம்பை, பாளையங்கோட்டை, நெல்லை ஆகிய இடங்களில் உள்ளனர்.

Rescue team is ready after Thamiraparani river floods.

அடுத்த செய்தி