ஆப்நகரம்

வழக்கு விசாரணையின் போது கண் கலங்கிய நீதிபதி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதி கண் கலங்கியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Samayam Tamil 16 Oct 2020, 4:53 pm
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, சட்ட மசோதாவை இந்த வருடமே அமல்படுத்த வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாகவே இடஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை இந்த மசோதாவை தமிழக ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. ஆனால், தற்போது வரை அந்த சட்ட மசோதா ஆளுநரின் பரிசிலனையில்தான் உள்ளது. எனவே, அவரது முடிவை கேட்டு தெரிவிக்குமாறு ஆளுநரின் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது என்றும் காலக்கெடுவையும் விதிக்க இயலாது என்றும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி கிருபாகரன் கண் கலங்கி தெரிவித்த கருத்துகள் அங்கிருந்தவர்களையும் வேதனையில் ஆழ்த்தியது.

இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா? சர்ச்சைக்கு விளக்கம் அளித்த முரளிதரன்!

கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன், கிராமப்புற மாணவர்கள் தாங்கள் மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்ற கனவோடு படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடஒதுக்கீட்டை அரசு மறுக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரியது என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி