ஆப்நகரம்

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து!

மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு, எதிரிக்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை ஆகாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

Samayam Tamil 11 Jun 2020, 2:27 pm
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்களில் உள்ள மருத்துவ இடங்களில் மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் 50 சதவீத முதுநிலை, 15 சதவீத இளநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய இட ஒதுக்கீடு கடந்த மூன்றாண்டுகளாக ஒதுக்கப்படவில்லை.
Samayam Tamil உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவுக்கு மட்டும் ஒதுக்கவேண்டும் என்ற விதி இருந்தும் அதை இதுவரை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இட ஒதுக்கீடு முறையாக வழங்காமல் கலந்தாய்வு நடத்தக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து, இளநிலை மருத்துவ படிப்பு, மருத்துவ மேற்படிப்பு உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரி அதிமுக, திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் என ஆளுங்கட்சி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கொரோனா: பீதியை கிளப்பும் பாதிப்பு விவரங்கள்!

இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணையை இன்று நடத்திய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடும்படி உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின் போது இட ஒதுக்கீட்டை மறுப்பது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு என்பது உரிமைதான். ஆனால் அடிப்படை உரிமை ஆகாது என கருத்து தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி