ஆப்நகரம்

நாமக்கல் நூற்பாலையில் சோதனை நடத்தியதில் 41 சிறுமிகள் மீட்பு

நாமக்கலில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தனியார் நூற்பாலையில் போதிய அடிப்படை வசதியின்றி வேலை செய்துவந்த 41 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

TNN 28 Nov 2016, 11:21 am
நாமக்கல் : நாமக்கலில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தனியார் நூற்பாலையில் போதிய அடிப்படை வசதியின்றி வேலை செய்துவந்த 41 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil revenue dept inspection in namakkal textile company
நாமக்கல் நூற்பாலையில் சோதனை நடத்தியதில் 41 சிறுமிகள் மீட்பு


நாமக்கல் எருமப்பட்டியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் 16 முதல் 18 வயதான 41 சிறுமிகள் வேலை பார்த்து வருவதாக சைல்டு லைன் அமைப்பிற்கு புகார் வந்தது. இதையடுத்து அங்கு நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.ராஜசேகரன் தலைமையில் வருவாய் அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் திருச்சி, புதுக்கோட்டை,கரூர், சேலம்,பெரம்பலூர்,வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 41 சிறுமிகளை மீட்டனர். அதோடு அங்கு போதிய அடிப்படை இல்லை எனவும் நேரில் பார்த்தனர்.

மீட்கப்பட்ட சிறுமிகள் பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சில நாட்களில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். அந்த சிறுமிகளை முன்பணம் கொடுத்த வேலைக்கு அழைத்து வந்திருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இருந்தால் அந்த நிறுவனத்தின் மீது கொத்தடிமை தொழிலாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி