ஆப்நகரம்

தமிழக சட்டமன்றத்தில் வரும் 21ம் தேதி திருத்திய பட்ஜெட் தாக்கல்

வரும் 21ம் தேதி கூடும் தமிழக சட்டமன்றத்தில், 2016-17ம் ஆண்டிற்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

TNN 14 Jul 2016, 12:43 pm
சென்னை: வரும் 21ம் தேதி கூடும் தமிழக சட்டமன்றத்தில், 2016-17ம் ஆண்டிற்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Samayam Tamil revised budget in tamilnadu assembly on june 21
தமிழக சட்டமன்றத்தில் வரும் 21ம் தேதி திருத்திய பட்ஜெட் தாக்கல்


கடந்த மே மாதம் 16ம் தேதி, தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து கடந்த மாதம் 16ம் தேதி, ஆளுநர் ரோசையா உரையுடன் முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்றது. 4 நாட்கள் விவாதத்திற்கு பின்னர், சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 2016-17ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21ம் தேதி தொடங்க உள்ளது. அப்போது நடப்பாண்டிற்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெறும்.

இந்த கூட்டத்தொடர் ஒருமாதத்திற்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அடுத்த செய்தி