ஆப்நகரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு: 41 வேட்பாளர்கள் போட்டி

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெற்றுள்ளது.

TNN 23 Mar 2017, 4:09 pm
Samayam Tamil rk nagar by election 2017 41 candidates filed petition
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு: 41 வேட்பாளர்கள் போட்டி

சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெற்றது. இத்தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணி ‘அதிமுக அம்மா’ என்ற பெயரிலும் ஓபிஎஸ் அணி ‘அதிமுக புரட்சித்தலைவி அம்மா’ என்ற பெயரிலும் களமிறங்குகின்றன. மேலும், திமுக, பாஜக, மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், சமக, நாம் தமிழர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக அம்மா என்ற பெயரில் களமிறங்கும் சசிகலா அணியின் சார்பாக அதிமுக பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவர் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் களமிறங்கும் ஓபிஎஸ் அணியின் சார்பாக மதுசூதனன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் மின்கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை சார்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் மருதுகணேஷ் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக களமிறங்குகிறார்.

பாஜக சார்பில் இயக்குனர் கங்கை அமரன் போட்டியிடுகிறார்.

சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் எம்.அந்தோணி சேவியர் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைகோட்டு உதயம் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக லோகநாதன் போட்டியிடுகிறார்.

மேலும், சுயேட்சை வேட்பாளர்களும் சேர்த்து மொத்தம் 41 பேர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள். வேட்புமனு தாக்கல் இன்று முடிந்துள்ளதைத் தொடர்ந்து நாளையுடன் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்காக காலக்கெடுவ முடிகிறது.

அடுத்த செய்தி