ஆப்நகரம்

ஆர்கே நகர் இடைத்தேர்தல்: நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்

ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது.

TNN 9 Apr 2017, 5:47 pm
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது.
Samayam Tamil rk nagar campaign will be finished tomorrow
ஆர்கே நகர் இடைத்தேர்தல்: நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை சார்பில் தீபா, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதன், நாம் தமிழர் சாட்சி சார்பாக கலைக்கோட்டுதயம், பாஜக சார்பாக கங்கை அமரன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுயேட்சைகள், இதர கட்சிகள் என மொத்தம் 62 பேர் ஆர்கே நகர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

தேர்தல் களத்தில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளதால், அங்கு வெற்றி பெற்று விட வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

அதேசமயம், பணப்பட்டுவாடா உள்ளிட்டவைகளை தடுத்து வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் முனைப்பு காட்டி வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரி, மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டவர்களை பணியிட மாற்றம் செய்ததுடன் சிறப்பு அதிகாரி, பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையமும் தீவிர பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், ஆர்கே நகரில் நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து, 12-ம் தேதி வாக்குப்பதிவும், 15-ம் தேதி வாக்கு எண்ணிகையும் நடைபெறவுள்ளது.
RK Nagar: Campaign will be finished tomorrow

அடுத்த செய்தி