ஆப்நகரம்

வேட்புமனுத் தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் மருது கணேஷ்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

TNN 22 Mar 2017, 3:06 pm
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil rk nagar dmk candidate filed his nomination
வேட்புமனுத் தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் மருது கணேஷ்


தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக சார்பில் மருது கணேஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் ஆர்.கே. நகர் வேட்பாளர், அடிப்படையில் ஒரு செய்தியாளராக 25 ஆண்டுகளாக வட சென்னை பகுதியில் பணியாற்றியவர். செய்தி சேகரிக்கும் பணிகளுடனேயே திமுக பொறுப்புகளையும் பார்த்து வந்த மருது கணேஷுக்கு ஆர்.கே. நகரின் அனைத்து பிரச்சனைகளும் அத்துபடி எனவும், தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் எனவும் திமுக-வினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, திமுக செயல் தலைவரை சந்தித்த அவர், ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் நாளையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
RK Nagar DMK candidate filed his nomination

அடுத்த செய்தி