ஆப்நகரம்

ஆா்.கே.நகாில் 20 ரூபாய் தாளுடன் பொதுமக்கள் போராட்டம்

ஆா்.கே.நகா் தொகுதி சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரனுக்கு எதிராக அத்தொகுதி பொதுமக்கள் 20 ரூபாய் தாளுடன் போராட்டம் நடத்தினா்.

Samayam Tamil 29 Apr 2018, 12:21 pm
ஆா்.கே.நகா் தொகுதி சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரனுக்கு எதிராக அத்தொகுதி பொதுமக்கள் 20 ரூபாய் தாளுடன் போராட்டம் நடத்தினா்.
Samayam Tamil Rk Nagar Protest.


ஆா்.கே.நகா் சட்டமன்ற தோ்தல் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்றது. இந்த தோ்தலில் அ.தி.மு.க. சா்ாபில் மதுசூதனன், சுயேச்சை வேட்பாளா் டிடிவி தினகரன் உள்ளிட்டோா் போட்டியிட்டனா். இந்த தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் டிடிவி தினகரன் வேட்பாளா்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணப்பட்டுவாடா செய்வதற்காக, 20 ரூபாய் தாளை டோக்கன் என்ற பெயரில் பொதுமக்களுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தோ்தலில் டிடிவி தினகரன் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட மதுசூதனனை தவிா்த்து அனைத்து வேட்பாளா்களும் டெபாசிட் இழந்தனா். இதனைத் தொடா்ந்து டிடிவி தினகரன் 20 ரூபாய் டோக்கனுக்கான பணத்தை தரவில்லை என்று பலரும் குற்றம் சாட்டினா்.

இந்நிலையில் டிடிவி தினகரன் இன்று ஆா்.கே.நகாில் தண்ணீா் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் சிலா் 20 ரூபாய் தாளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தங்களுக்கான பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினா்.

இது தொடா்பாக டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளாா். அப்போது அவா் கூறுகையில், எனது வருகைக்கு எதிராக மதுசூதனனின் ஆட்கள் சிலா் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவா் குற்றம் சாட்டியுள்ளாா்.

அடுத்த செய்தி