ஆப்நகரம்

புதிய ஆளுநர் பதவியேற்பு: மாளிகையில் எளிமையாக நடந்த நிகழ்வு!

தமிழ்நாட்டின் 15ஆவது ஆளுநராக ஆா்.என்.ரவி இன்று (செப்டம்பர் 18) காலை பதவியேற்றார்.

Samayam Tamil 18 Sep 2021, 11:37 am
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆா்.என்.ரவி நியமிக்கப்பட்டார். நேற்று முன் தினம் இரவு குடும்பத்துடன் ஆர்.என்.ரவி சென்னை வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
Samayam Tamil rn ravi


ஆளுநர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையிலேயே எளிமையாக நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக அதிகளவில் கூட்டம் கூடாதாவாறு விழா நடத்தப்பட்டது.

புதிய ஆளுநர் ஆா்.என்.ரவிக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

“மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு தமிழகத்தில் உள்ளது. ஆளுநர் பதவிக்கான விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவேன். அரசியலைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழக மக்களுக்கு சேவையாற்றுவேன்” என ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
மகப்பேறு கால விடுப்பு: தலைமைச் செயலாளர் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!
இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சா் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜி.கே. வாசன், கே.பி, முனுசாமி, வேலுமணி, வைத்திலிங்கம், தங்கமணி, தனபால் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகா்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் உளவுத் துறையில் பணியாற்றிய ஆர்.என்.ரவி 2012ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு, பிரதமா் அலுவலகத்தில் இணை புலனாய்வு குழுவின் தலைவராக செயல்பட்டார்.

2018ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டாா்.
ஸ்டாலினை இம்ப்ரஸ் செய்த செந்தில் பாலாஜி: கலக்கும் கரூர் திமுக!2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கடந்த 15ஆம் தேதி வரை நாகாலந்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தாா்.

இந்த நிலையில், தமிழக ஆளுநராக தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

அடுத்த செய்தி