ஆப்நகரம்

ஜிப்மர் மருத்துமனையில் ரோபோ மூலம் அறுவை சிகிச்சை

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துமனையில் ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

TNN 30 Mar 2017, 5:27 pm
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துமனையில் ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil robotic surgery in jipmer hospital
ஜிப்மர் மருத்துமனையில் ரோபோ மூலம் அறுவை சிகிச்சை


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள குடலில் அறுவை சிகிச்சை துறையில் மேம்பட்ட அறுவை சிகிச்சை உருவகப்படுத்துதல் மையம் நிறுவப்பட்டுள்ளது. ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா தொடங்கிவைத்தார். அதன் பின்னர் பேசிய அவர், மருத்துவ கல்வியில் உருவகப்படுத்துதல் முறையில் கொடுக்கப்படும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

ஜிப்மர் மருத்துவமனை குடலில் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் பிஜூபொட்டாகட் உருவகப்படுத்தும் கருவிகளின் முக்கியத்துவத்தை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் புதுவை மற்றும் தமிழகத்தில் இருந்து கிட்டத்தட்ட 15 அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

அறுவை சிகிச்சை உருவகப்படுத்துதல் என்பது கணினி தொழில்நுட்பம் மூலமாக நோயாளிகளுக்கு செய்யும் அறுவை சிகிச்சைகளை செய்து பயிற்சி எடுத்துக்கொள்ள உதவும் உபகரணங்களாகும்.
ரோபோடிக் உருவகப்படுத்தும் உபகரணம் இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மர் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையில் மனித கைகளால் இல்லாமல் ரோபோடிக் கைகள் மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ரோபோடிக் கைகளை கணினி மூலமாக அறுவை சிகிச்சை நிபுணர் செயல்படுத்துவார்.

உருவகப்படுத்துதல் முறையில் அறுவை சிகிச்சை முறைகளை கற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி