ஆப்நகரம்

திருவண்ணாமலையில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.1.50 கோடி நகை மாயம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரபல தனியாா் நிதி நிறுவனத்தில், ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது குறித்து காவல் துறையினா் ரகசியமாக விசாணை மேற்கொண்டு வருகின்றனா்.

Samayam Tamil 4 Jun 2019, 1:22 pm
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் பிரல தனியாா் நிதி நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளா்களின் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமானதால் பரபரப்பு.
Samayam Tamil Gold


திருவண்ணாமலை மாவட்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில், திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பலரும் தங்களது நகைகளை அடமானம் வைத்துள்ளனர்.

இந்நிலையில் வாடிக்கையாளா்களால் அடமானம் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கடந்த வாரத்தில் மாயமாகி உள்ளதாக மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்தியிடம் புகாா் தொிவிக்கப்பட்டது.

கடந்த 4 தினங்களாக நிதி நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் உள்ளிட்ட ஐந்து நபா்களிடம் அவ்வப்போது காவல் துறையினா் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தனியாா் நிதி நிறுவனம், அங்கு பணிபுரிந்த பல்வேறு நபர்களை மாற்றம் செய்துள்ளதாகவும், திருட்டு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து காவல் துறையினா் தகவல் தெரிவிக்கையில், நிதி நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா? நகைகளை அடமானம் வைக்காமல் வைத்ததுபோல் கணக்கு காட்டி உள்ளார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரகசிய விசாரணையை காவல் துறையினா் முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி