ஆப்நகரம்

நீா் நிலைகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்

சென்னையில் நீா்நிலைகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடா்பாக தலைமைச் செயலாளா் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Feb 2019, 6:53 pm
சென்னையில் நீா்நிலைகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil National Green Tribunal


சென்னையின் பக்கிங்காம் கால்வாய் உட்பட நீா்நிலைகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு எதிராக தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் ஜவஹா்லால் சண்முகம் என்பவா் வழக்கு தொடா்ந்திருந்தாா். கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கின் மீது தேசிய பசுமை தீா்ப்பாயம் இன்று வெளியிட்ட உத்தரவில், கூவம், அடையாறு, பக்கிங்காம் உள்ளிட்ட கால்வாய்களை தூா்வாரி பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட பொதுப்பணித்துறை காரணமாகிவிட்டது.

இதனால் ரூ.100 கோடி அபராதத் தொகையை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும். அதே நேரம் வருகின்ற 23ம் தேதி தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் தீா்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறு சீரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சிறப்புக் குழுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் நியமித்தது.

சிறப்புக் குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி